பப்பாளிப்பழம் சாப்பிடுவதனால் இயற்கையாகவே நம் உடலுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம்.
பப்பாளி பழத்தில் விட்டமின் சி நிறைந்து உள்ளது.எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் வலுவடைய, முக்கியமாக ஞாபகசக்தி அதிகரிக்கும்.
பப்பாளியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாக்கும், ரத்தமும் சுத்தமாகும்.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடலில் உள்ள புழுக்களை அழித்து சுத்தம் செய்யும்.
பப்பாளிப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படாது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் பப்பாளிக்கு உண்டு.
அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள், ரத்தத்தில் நோய்க் கிருமிகள் மற்றும் நச்சுகளை நீங்கி கல்லீரல் வீக்கத்தையும் குணமாக்குகிறது.
பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்து ஏராளமாக உள்ளதால் புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பப்பாளிப் பழத் துண்டுகளை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி முற்றிலும் குணமாகும், ஆண் மலட்டுத்தன்மை நீங்கும்.
பப்பாளியில் விட்டமின்”ஏ” அதிகம் உள்ளதால் கண்பார்வை தெளிவடையும், மாலைக்கண் நோய் குணமாகும், கண்களுக்கு நல்லது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் வறண்ட மேல்தோலை அகற்றி புதிய தோலை உருவாக்குகின்ற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.
பப்பாளி பழத்தை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று ஜொலிக்கும். மேலும் கருவளையம், முகத்தில் உள்ள கருமை, சுருக்கம் நீங்கும்.
பிரசவித்த பெண்கள் தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். ஏனென்றால் இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு அவசியமான ஒன்று என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.