Categories
லைப் ஸ்டைல்

“குழந்தைகள் காணாமல் போக”… காரணங்கள் என்னென்ன தெரியுமா..?

நாம் பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள் காணாமல் போக என்னென்ன காரணங்கள் உண்டு என்பதை இதில் பார்ப்போம்.

சென்னையில் நடப்பாண்டு மட்டும் 257 பெண்கள் கடத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் 179 பேர் மீட்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுபோல 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 51 பேர் காணாமல் போனதாகவும், அதில் 37 பேர் மட்டும் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. குழந்தைகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இருபாலருமே குற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஆக கருதுகின்றனர். குற்றங்களில் குழந்தை கடத்தல் மிகவும் கொடுமையானது. மனித சமுதாயத்திற்கு அவமானத்தை அளிக்கக்கூடியது. கடும் சட்டங்களும், தண்டனைகளும் இயற்றப்பட்டு இருந்தாலும் இந்த செயல் மட்டும் குறைந்தபாடில்லை.

பெற்றோர்கள், ஆசிரியர்கள். பொது சமூகம் அனைவருமே அதில் பங்கு இருக்கின்றது. பெண் குழந்தை காணாமல் போவதற்கு பருவ காதல் ஒரு காரணமாக செயல்பட்டாலும், குடும்ப அமைப்பில் பெற்றோர்களுக்கு இடையில் புரிதல் இல்லாமல், தந்தையின் குடிப் பழக்கம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொல்லைகள் ஆகியவை முக்கிய காரணங்களாக அமைகிறது. பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்களும் மாணவர்களின் படைப்பு திறனை வளர்ப்பதோடு அவர்கள் திசை மாறுதல்களையும் கண்டறிந்து உரிய நல்வழிப் படுத்துதல் அவர்களுக்கு கூறவேண்டும்.

குழந்தைகளிடம் உரையாடும்போது வார்த்தைகளில் மிக கவனம் இருக்க வேண்டும். எளிதில் உணர்ச்சி வயப்படும் நிலையில் இருக்கும் வயதில் அவர்களை நோக்கி சுடு சொற்களை பேசக்கூடாது. வீடு பள்ளிக்கூடம் ஆகியவற்றுக்கு வெளியே பொது சமூகத்திற்கு குழந்தைகள் வளர்ப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது. குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் அபாயம் இருந்து வருகிறது. அவர்கள் பிச்சை எடுக்க வைப்பது சிலசமயங்களில் கடத்தி வைத்து பணம் பறிக்க முயற்சி மேற்கொள்வது மிகவும் கொடுமையான விஷயம்.

இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட மிக கடுமையான சட்டம் இருந்தாலும் குற்றவாளிகள் விசாரணை காலத்தை நீடிக்க விடாமல், தனி நீதிமன்றங்களை உருவாக்க வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. அதேபோல தற்பாதுகாப்பு சார்ந்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை பற்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புணர்வு நடத்த வேண்டும்.

Categories

Tech |