Categories
உலக செய்திகள்

130 பேரை கொன்ற சிறுவர்கள்.. அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

புர்கினா பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் 130 பேரை கொலை செய்தவர்கள் 12-14 வயதுடைய சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்கினா பாசோ அரசு, சிறுவர்கள் தான் 130 பேரின் கொலைக்குக் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதியன்று Solhan என்ற கிராமத்தில் திடீரென்று துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள், கண்ணில் பட்ட மக்களை சுட்டு தள்ளினார்கள். மேலும் கிராமத்தில் தீ வைத்துள்ளனர்.

இதில் சுமார் 130 நபர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நாட்டில் நடந்த மிக பயங்கரமான தாக்குதல் இதுதான் என்று புர்கினா பாசோ அரசு குறிப்பிட்டுள்ளது. எனினும், எந்த தீவிரவாத அமைப்பினர் இத்தாக்குதலை நடத்தினார்கள் என்று அரசு உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 12 லிருந்து 14 வயதுடைய சிறுவர்கள் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களை ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்பு அனுப்பிவைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |