பிரிட்டனில், தன் குழந்தைகளை கத்தியால் தாக்கிய பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் வடக்கு அயர்லாந்தின் தலைநகரான Belfast-ல் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கதறல் சத்தம் கேட்டுள்ளது. எனவே அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்பு அந்த வீட்டுனுள் சென்று பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு, பிறந்து 7 மாதங்கள் மட்டுமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையும், இரண்டு வயதுடைய பெண் குழந்தையும் கத்தி குத்து காயங்களுடன் கிடந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு பெண் கைதானதாக காவல்துறையினர் கூறியிருந்தார்கள். தற்போது அந்த குழந்தைகளின் தாயான Raluca Tagani என்ற 29 வயது பெண் தான் குற்றவாளி என்று அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
இதில் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் குழந்தை, உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குழந்தையின் உடல்நலம் முன்னேறி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. Raluca Tagani மீது கொலை குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.