சீனாவில் குழந்தைகளுக்கென்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருக்கும் சைனோபேக் என்ற நிறுவனம் 3 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கென்று கொரோனாவேக் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் தன்னுடைய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.
இதனையடுத்து குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எழுதப்பட்டிருப்பதாவது, சைனோபேக் நிறுவனத்தினுடைய தலைவர் கொரோனாவேக் தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பதையும், இதனை எந்த வயதிலிருந்து போட்டுக் கொள்ளலாம் என்பதையும் இதுவரை முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையே சைனோபேக் நிறுவனம் சைனோவேக் கொரோனா தடுப்பூசியை 2 தவணையாக 3 முதல் 17 வயதுடைய 100 க்கும் மேலான தன்னார்வலர்களுக்கு செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சைனோபேக் நிறுவனம் கண்டுபிடித்த இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு தன்னுடைய ஆதரவை அளித்துள்ளது. இந்நிலையில் சீன பொதுமக்களுக்கு 7,30,00,000 தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் கூறியுள்ளது.