சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரத்தில் சிறுவர்கள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக பொது பேருந்துகளில் பயணிக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் நகர சிறுவர் நாடாளுமன்றம், இதற்கு முன்பே சிறுவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் லூசர்ன் நாடாளுமன்றம் அதனை ஏற்கவில்லை. அதாவது வழக்கமாக, சிறுவர்கள் தங்கள் குடியிருப்பிற்கு செல்ல 6.20 பிராங்குகள் பேருந்துகளில் வசூலிக்கப்படும்.
இதனை வருட சந்தாவாக செலுத்தும் போது 610 பிராங்குகள் செலவாகும். எனவே தற்போது சிறுவர்கள் இது தொடர்பில் வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனினும் இதில் சில விதிமுறைகள் உள்ளது. அதன்படி, 18 வயதிற்கு குறைவாக உள்ள சிறுவர்கள் மண்டலம் பத்திற்குள் மட்டும் தான் கட்டணமின்றி பயணிக்க முடியும்.
மேலும் பேருந்து பயணங்களுக்கு பதிலாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து கலந்து ஆலோசனை செய்த பின்பு சரியான முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.