மதுபான கடைகளை அடைக்க வலியுறுத்தி 5 சிறுவர்கள் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தவர்களை போலீசார் தடுத்துள்ளனர்.சென்னை
தமிழ்நாடு சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டில் திறப்பதாக அரசுத்தரப்பில் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகாஷ், சுப்ரியா, ஆதர்ஷ், சபரி மற்றும் விஷ்டோரியா ஆகிய ஐந்து சிறுவர்கள் முதலமைச்சர் இல்லம் நோக்கி 30 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டனர். குடியை விடு படிக்க விடு என்னும் வாசகத்துடன் முதலமைச்சர் வீடு வரை முகக்கவசம் அணிந்தவாறு நடந்தது சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சிறுவர்களை தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.