Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”பதவி உயர்வு ஏற்படும்” குழந்தைகள் மீது கவலை கொள்வீர்கள் ….!!

கடக ராசி அன்பர்களே…!! இன்று புதிய தொழில் துவங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடும். புதிய சேமிப்புகளில் முதலீடு செய்ய முனைவீர்கள். வலுவான உயர் அதிகாரிகளின் உதவியால் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். மனதில் உறுதியுடன் செயல்படுவீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணிகளில் சில இன்று நிறைவேறும். தொழில் அபிவிருத்தி காண பண வரவு கிடைக்கும். உறவினர்கள் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று தற்காலிக பதவி உயர்வு , கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவதற்கான சூழல் இருக்குங்க. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மன குழப்பங்கள் தீர்ந்து தெளிவு ஏற்படும்.

இன்றைய நாள் உங்களுக்கு தெளிவான சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து செல்லும். அவர்களின் நலனுக்காக இன்று நீங்கள் பாடுபடுவீர்கள். இன்று கல்விக்கான முயற்சியில் மேற்கொண்டால் அனைத்து காரியங்களும் சிறப்பாகவே இருக்கும். மனம் மகிழ்ச்சியாகவும் காணப்படும். அதே போல் இன்று நீங்கள் காலை எழுந்ததும் சூரிய பகவானை கையெடுத்துக் கும்பிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் ,  உங்கள் வாழ்க்கையை மேன்மேலும் உயர்த்திக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்டமான  எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |