உலகம் முழுவதும் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண் அனைவருமே குழந்தைகளாக தான் கருதப்படுவர். இந்தியாவிலும் 18 வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான சட்ட உரிமைகளும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் அனைத்து நாடுகளுமே முன்னுரிமை கொடுத்து கவனிக்கிறது. இதனால் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு வாகனம் ஓட்டு உரிமை, சட்டபூர்வமான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் உரிமை போன்றவைகள் வழங்கப்படுவதில்லை. அதன் பிறகு 18 வயது நிரம்பிய பெண்ணும் 21 வயது நிரம்பிய ஆணும் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது. ஒருவேளை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்து குழந்தையை பெற்றுக்கொண்டாலும் அவர்களும் குழந்தைகளாகத்தான் கருதப்படுவார்.
அதன் பிறகு தங்கள் வாழும் சமுதாயத்தில் இருந்து குழந்தைகள் பலவீனமானவர்களாக கருதப்படுவதால் தான் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டி இருக்கிறது. அதோடு குழந்தைகளை சிலர் தவறான வழியில் வழி நடத்துவதோடு, சட்டவிரோதமான முறையில் பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்குவர். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை காப்பதற்கு சட்டங்களும் இருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளின் சில உரிமைகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவருமே சட்ட ரீதியான பாதுகாப்பை பெறுவதற்கு தகுதியுடையவர்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் அனைத்து குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட உரிமைகளை வழங்கி இருக்கிறது.
அதன் பிறகு 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி சட்டம், 14 வயது உட்பட்ட குழந்தைகளை ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்துவதை தடுக்கும் சட்டம், பொருளாதார சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு குழந்தைகளின் வயதுக்கு மீறிய கட்டாய வேலையை அவர்கள் மீது திணிப்பதை தடுக்கும் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் இருக்கிறது. இதனையடுத்து சமமான உரிமை, பாரபட்சமாக நடத்தப்படுவதை தடுக்கும் உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சட்டபூர்வமான செயல்களுக்கான உரிமை, வலுக்கட்டாயமான கொத்தடிமைகளாக நடத்தப்படுவது மற்றும் தொழில்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் உரிமை, சமுதாயத்தில் நலிந்த மற்றும் பலவீனமான பிரிவினரை சேர்ந்தவர்களை அனைத்து விதமான துன்பத்திலிருந்து பாதுகாக்கும் உரிமை, சுண்டல்களில் இருந்து பாதுகாக்கும் உரிமை போன்ற பல்வேறு விதமான உரிமைகளும் சட்டங்களும் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பான சலுகைகளை வழங்குதல், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்தல், உணவின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியத்துக்கான முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்தல் என அரசாங்கத்திற்கு சில கடமைகளும் இருக்கிறது. இப்படி குழந்தைகளுக்காக பல்வேறு விதமான சட்டங்கள் இருக்கும் பட்சத்தில் ஆசிரியர்கள் குழந்தைகளின் அளவில் அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களை சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும்.
இதேபோன்று பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளின் மீது தனி கவனம் செலுத்தி அவர்களை சமுதாயத்தில் அனைவரும் மதிக்கக்கூடிய விதமாக ஒரு நல்ல மனிதராக வளர்க்க வேண்டும். இப்படி குழந்தைகளின் மீது கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் மற்றும் கடமை சமுதாயத்தில் உள்ள அனைவருக்குமே இருக்கிறது. ஏனெனில் ஒரு குழந்தை வளர்க்கப்படும் விதத்தில் இருந்து தான் அவன் சமுதாயத்தில் என்னவாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும். இந்நிலையில் ஐநா சபைகளும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான பாதுகாப்பு சட்டங்களை இயற்றியுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு உயிர் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சி மற்றும் பங்கேற்பதில் உரிமை போன்றவைகளும் இருக்கிறது.
1. உயிர் வாழும் உரிமை:
வாழ்வதற்கான உரிமை, சிறந்த தரமான ஆரோக்கியத்தை பெரும் உரிமை, சத்துணவு, போதிய அளவு தரமான வாழ்க்கை, அடையாளத்திற்கான ஒரு பெயர் மற்றும் தேசிய அடையாளம்
2. வளர்ச்சி உரிமை:
கல்வி கற்பதற்கான உரிமை, ஆரம்பகட்ட குழந்தை பருவத்தில் பராமரிப்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல், சமூக பாதுகாப்பு, ஓய்வு பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை.
3. பங்கேற்பு உரிமை:
குழந்தைகளின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பு கொடுத்தல், எதையும் வெளிப்படுத்தும் உரிமை, தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளும் உரிமை, கருத்தில், எண்ணத்தில், மதங்களில் தேர்ந்தெடுத்து பின்பற்றும் உரிமை.
4. பாதுகாப்பு உரிமை:
சுரண்டல்கள், கொடுமைகள், மனிதத் தன்மையற்ற முறையில் கொடூரமாக நடந்து கொள்ளுதல், உதாசீனம் செய்தல் மற்றும் புறக்கணித்தல், நெருக்கடி காலம், போர், உடல் ஊனமுற்ற நிலை போன்றவற்றில் இருந்து சிறப்பு பாதுகாப்பு போன்றவற்றை பெரும் உரிமைகள் இருக்கிறது.