இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. குழந்தை தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு சொல் பேச்சிலே உள்ளம் குனியவைத்து கள்ளமில்லா சிரிப்பினால்
உள்ளம் நெகிழ வைக்கும்
மழலை அதன் சிரிப்பினிலே
உலகம் கண்டேன்…
இறைவன் படைப்பில்
இயல்பு மாறாமல் தொடரும் பட்டியலில்
என்றும் இருப்பது
மழலை சிரிப்பு மட்டுமே…
பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ
ஆனால், மழலை குழந்தை சிரிப்பில் தினந்தோறும் பூக்கிறது குறிஞ்சி…
ஒரே நொடியில் கோபங்கள் தணிக்கும்
பெரும் சக்தி கொண்ட பிறவு, குழந்தைகள்…
இறைவன் படைப்பில் அனைவரும் நல்லவர்களே,
குழந்தை பருவத்தில்…!
ஈரைந்து மாதங்கள் தாய் சுமக்கிறாள்
பல வலிகள் கடந்து உயிரை உலகிற்கு கொண்டுவருகிறாள்…
அதை அனைத்தையும் தனது ஒற்றை சிரிப்பில் போக்கிவிடுகிறது குழந்தை…
மழை ஒரு முறை வெயில் ஒரு முறை
குளிர் முறை என
காலங்கள் மாறலாம்..
ஆனால், குழந்தையின் புன்னகை காலத்திற்கு ஏற்ப மாறுவதில்லை…
மனதில் கனமில்லை
பொறாமை இல்லை
வஞ்சகம் இல்லை
இருப்பதை வைத்து மகிழ்ந்திருக்கும்…
குழந்தையாக இருந்தால்…
வாழ்க்கை முழுவதும் இன்பம் தொடரும்