Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் சிறுவர்களால் கண்டடுக்கப்பட்ட ஐம்பொன் பெருமாள் சிலை…!!

ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த குளத்தில் இருந்து ஐம்பொன் பெருமாள் சிலையை மீட்ட சிறுவர்கள் அதனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் மாவதிலுள்ள  ஏகாம்பரநாதர் கோவில்  தீர்த்த குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், அதில் அப்பகுதி  சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாக உள்ளது. நேற்று புதன்கிழமையன்று வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்தபோது,சிறுவர்கள் குளத்தில் சிலை ஒன்றை கண்டுள்ளனர்.

சிறுவர்கள் அச்சிலையை மீட்டு சிவகாஞ்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்’. இதைபோன்று சில மாதங்களுக்கு முன் காஞ்சி குமரக் கோயிலின் அர்ச்சகர் கார்த்திகேயன் என்பவர் குடிபோதையில் கச்சியப்பர் சிலையை இந்தக் குளத்தில் வீசியது குறிப்பிடத்தக்கது. அந்த சிலையை தேடும் பணியை போலீசார் இன்று தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |