கேரள மாநிலத்தை சேர்ந்த பேஷன் டிசைனரான ஒரு பெண்ணை அவரது காதலன் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்ததால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பங்கு வர்த்தக பணிபுரிந்து வருகிறார். இவர் கொச்சியில் உள்ள பேஷன் டிசைனராக பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் ஒரு பிளாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் அந்த பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை அவரின் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்ய சொல்லி வற்புறுத்தி உள்ளார். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்த காரணத்தினால் அவரை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் பணத்தைக் கொடுத்தார். ஆனால் அந்த பணம் திரும்ப வரவே இல்லை. மீண்டும் அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். மேலும் இந்த முறை பணம் கொடுத்தால் மாதம் 40 ஆயிரம் வருமானம் தருவதாகவும் கூறியுள்ளார். இதற்கு அந்தப் பெண் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன் மிளகாய் பொடி கலந்த சுடுநீரை அவர் மேல் ஊற்றி, சிறுநீரை குடிக்கச் சொல்லி, நிர்வாணமாக படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணை வீட்டில் அடை.த்து வைத்து பிப்ரவரி 20 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை கொடுமை செய்துள்ளார்.
பணம் கொடுக்கவில்லை என்றால் இந்த ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாகவும், அவரது பெற்றோருக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்து ஒரு மாதம் ஆகியும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது. தற்போது இந்த சம்பவம் வெளியில் வந்த காரணத்தினால் கடந்த மூன்று நாட்களாக காவல்துறையினர் தீவிரமாக தேடி அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும் அப்பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.