விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளும் அசல் கோலார் தான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் அசல் வீட்டை விட்டு வெளியேறியது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.