சீன அதிபரின் ஆட்சி ஹிட்லர் ஆட்சியை போன்றது என அந்நாட்டின் மாணவர் தலைவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தனை பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் சீன நாடு தான் காரணம் என்பதால், அந்நாட்டின் அரசின் மீது உலக மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல், சீனா தொடர்ந்து பல நாடுகளுடன் வர்த்தக ரீதியாகவும், எல்லை பிரச்சனைகளை மையமாக வைத்தும் மோதலை ஏற்படுத்த துடிக்கிறது.
இதன் காரணமாகவும், உலக மக்கள் சீனாவின் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் ஹிட்லரை போன்றவர். அவரது ஆட்சி நாஜி கட்சியின் ஆட்சி போன்றது என்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சீன மாணவர் தலைவர் சௌங் பெங் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா தற்போது சீனாவை எதிர்ப்பதைப் போல உலக நாடுகளும் எதிர்க்க வேண்டும் என்றும், ஜின்பிங்கின் ஆட்சி சீன குடி மக்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.