சீன அரசாங்கம் தன்னாட்சி பெற்ற தைவான் மீது பல தந்திரங்களை பயன்படுத்தி தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் மக்களின் மனவலிமையை சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைவான் வெளியிடும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தன்னாட்சி பெற்ற தைவான் அரசாங்கம் 2 வருடங்களுக்கு ஒரு முறை சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுகிறது. இந்நிலையில் தற்போதும் சீன ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கையை தைவான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதில் தைவான் நாட்டின் ராணுவம் மற்றும் மக்களின் மனவலிமையை சீர்குலைக்கும் விதமான தந்திரங்களை சீனா தங்கள் நாட்டின் மீது பயன்படுத்துவதாக தைவான் அரசாங்கம் குற்றம் சாட்டும் விதமாக ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.