சீனாவின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் “உய்கர் கட்டாய தொழிலாளர்கள் தடுப்பு பிரிவு சட்ட” மசோதாவில் கையெழுத்திட்டுள்ளது இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சீனாவிலுள்ள சின்சாங் என்னும் மாநிலத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் உய்கர் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களிடமிருந்து பிரிவினை வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக கூறி சீனா உய்கர் முஸ்லிம்களின் மீது அடக்குமுறையில் பயன்படுத்தி வருவதாக அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகிறது.
அதோடு மட்டுமின்றி சீனா உய்கர் இன முஸ்லிம்களை கருத்தடை மற்றும் கட்டாயக் கருக்கலைப்பு போன்ற செயல்களிலும் ஈடுபடுத்துவதாகவும் அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு மட்டுமின்றி சீனா உய்கர் முஸ்லிம்களை முகாம்களில் தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பொருட்கள் தயாரிக்க வைப்பதாகவும் அந்நாட்டின் மீது பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் “உய்கர் கட்டாய தொழிலாளர்கள் தடுப்பு சட்டப்” பிரிவில் கடந்த வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே சீனா அமெரிக்காவிற்கு இதுதொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதனைப் பொருட்படுத்தாமல் அமெரிக்கா உய்கர் கட்டாய தொழிலாளர் தடுப்பு சட்ட மசோதாவில் கையெழுத்திட்டது இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த சட்ட மசோதா சட்டத்திற்குப் புறம்பானது என்று சீனா அமெரிக்காவின் மீது சாடியுள்ளது.