சீனா கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்களை தடை செய்ததற்கான முக்கிய நோக்கத்தை பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
சீனா கொரோனா தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று சீனா கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததற்கான மற்றொரு நோக்கத்தை வெளியிட்டுள்ளது.
அதாவது சீனா தங்கள் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சீர்குலைத்து விடும் என்பதாலேயே அதற்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏனெனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவுள்ளதால் சீனர்களின் மீது அது ஆதிக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பாரம்பரியத்தை சீர்குலைத்து விடும் என்பதாலேயே அதற்கு தடை விதித்துள்ளதாக பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.