Categories
தேசிய செய்திகள்

‘சீன ஆக்கிரமிப்பில் பொய் சொல்பவர்களே தேசவிரோதிகள்’ – ராகுல் காந்தி சாடல் …!!

இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என பொய்யான தகவல் கூறி வருபவர்கள் தேசத் துரோகிகள் என ராகுல் காந்தி குற்றம் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் மத்திய அரசை, பல விவகாரங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இத்தகைய விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் முறையில், சில நாட்களாக வீடியோ தொகுப்புகளை பதிவு செய்து வருகிறார். இத்தகைய நிலையில் இன்று ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீன ஆக்கிரமிப்பு பற்றிய உண்மைகளை மறைப்பது தேசத் துரோகம் என்று விமர்சனம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில்,” இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிப்பதும் அத்தகைய உண்மையை மறைப்பதும் தேசத் துரோகம் இதனை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதே உண்மையான தேசப்பற்று” என பதிவிட்டு, அதனுடன் வீடியோ ஒன்றை இணைத்திருக்கிறார்.

அந்த வீடியோ பதிவில் ராகுல் காந்தி,”இந்தியனாக எனது முதல் முன்னுரிமை எனது நாடும், நாட்டு மக்களும் தான். நமது நிலப்பரப்பில் சீனா நுழைந்திருக்கின்றது. இது என்னை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அன்னியர்கள் எவ்வாறு நம் நாட்டில் ஊடுருவ முடியும்? என்று கூறியுள்ளார். மேலும், நான் இது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்தேன். முன்னாள் ராணுவ வீரர்களுடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தினேன். சீனா நம் நாட்டில் ஊடுருவி இருப்பது எனக்கு தெளிவாக தெரியும். அதனால் என்னால் மக்களிடம் பொய் சொல்ல முடியாது. இதனால் என் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும் அதற்காக எத்தகைய கவலையும் எனக்கு இல்லை. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவை சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை என பொய்யான தகவல்களை கூறி வருபவர்களுக்கு தேசத்தின் மீது எத்தகைய பற்றும் இல்லை” என அத்தகைய வீடியோவில் கூறியுள்ளார்.

Categories

Tech |