Categories
உலக செய்திகள்

நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை…. பிற மதத்தை மதிக்க வேண்டும்… கருத்து கூறிய சீனா…!!!

இந்தியாவில் பாஜக தலைவர்கள் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சையாக பேசியதற்கு, பிற மதங்களை மதிக்க வேண்டும் என்று சீனா கருத்து கூறியிருக்கிறது.

பாஜகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர்களான நவீன் ஜிந்தால், நுபுர் சர்மா இருவரும் நபிகள் நாயகம் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, உலகம் முழுக்க உள்ள அரபு நாடுகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்தியா இதற்கு விளக்கமளித்ததோடு, இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது.

இது மட்டுமல்லாமல் அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சீன அரசு, இந்திய நாட்டிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் வாங் வென்பின் தெரிவித்ததாவது, பிறரின் நாகரிகங்களுக்கும், மதங்களுக்கும் ஒவ்வொருவரும் மதிப்பளிக்க வேண்டும்.

சமமான முறையில் சேர்ந்து வாழவேண்டும் என சீனா கருதுகிறது. இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நினைக்கிறோம் என கூறியிருக்கிறார். சீன அரசு, சின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் செய்து வருவதாக பிற நாடுகள் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்கு சீனா இவ்வாறு கருத்து கூறியிருப்பது முரணாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |