அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகம், இந்திய எல்லைக்கு அருகில் சீன ராணுவத்தினரின் நடவடிக்கைகள் தற்போது அதிகமாக இருப்பதாக கூறியிருக்கிறது.
பென்டகன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, சீன ராணுவதினர், எல்லைக் கோட்டிற்கு அருகில், சொந்தம் கொண்டாடும் பகுதிகள் அவர்களுக்கு தான் என்று உறுதி செய்ய அந்த பகுதிகளில் அதிகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால், இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக, சீன அரசு, இந்திய நாடு, அமெரிக்காவுடன் தங்கள் உறவை பலப்படுத்திக்கொள்வதை தடுப்பதற்கு முயற்சிக்கிறது. எனவே, சீன நாட்டின் அதிகாரிகள் இந்தியா மற்றும் சீன உறவு பிரச்சனையில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள். எனினும் அவர்களின் முயற்சி வெற்றியடையவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.