சீன அரசுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தைவான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. தற்போது சீனாவுடன் தைவானை மீண்டும் ஒன்றிணைப்பது நிச்சயம் என சீன அதிபர் Xi Jinping உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சீன அரசின் அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என தைவான் நாட்டின் ஜனாதிபதி Tsai Ing-wen கூறியுள்ளார். குறிப்பாக சீன அதிபருக்கு பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி Tsai Ing-wen இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தைவான் நாட்டின் தேசிய நாள் அன்று அளித்த உரையில் ஜனாதிபதி Tsai Ing-wen கூறியதாவது, “சீனாவின் அழுத்தத்திற்கு தைவான் அடிபணியாது மற்றும் அதன் ஜனநாயக வாழ்க்கை முறையை தொடரும். அதுமட்டுமின்றி ஜனநாயகத்தை முதல் கேடயமாக தைவான் பயன்படுத்தி நிற்கிறது. சீனா எங்களுக்காக அமைக்கும் பாதையை ஏற்கும்படி தைவானை கட்டாயப்படுத்த முடியாது. சீனா அரசு சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றை வழங்கவில்லை.
மேலும் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் தொடர்ந்து சீன இராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைவதால் தேசிய பாதுகாப்பு மற்றும் விமானப்போக்குவரத்து அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீன அரசின் கெடுபிடிக்கு தைவான் அரசு அதிரடியாக செயல்படாது, இருப்பினும் அதன் பாதுகாப்பை பலப்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்.