சீன அரசு, தைவான் நாட்டின் மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பொருளாதார தடை அறிவித்திருக்கிறது.
சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் நாட்டிற்கு சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சீனா அந்நாட்டில் பயிற்சிகளை மேற்கொண்டது.
எனினும், அதற்குப்பின் அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு சமீபத்தில் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது. இதனால், மேலும் கோபமடைந்த சீனா, தைவான் நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட ஏழு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கிறது.