சீனாவுடனான எல்லை பிரச்சினை காரணமாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார்.
இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை விவகாரத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பலியாகினர், மேலும் சிலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா இடம்பெறுவதை சீனா 2016ஆம் ஆண்டு எதிர்த்தது அப்போது கூட பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு வழக்கம்போல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆனால் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி சீன அதிபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.