Categories
உலக செய்திகள்

சீனாவின் அடுத்தடுத்த முயற்சிகள்… நிக்கி ஹாலி பரபரப்பு பேட்டி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி சீனா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்துவதாகவும், ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி செய்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய நட்பு நாடுகளை அணுகி ஜோ பைடன் நிர்வாகம் ஆதரவை உறுதிபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவோம் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் சீனாவை உற்று நோக்குவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சீனா ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்தி சீனா முன்னேற முயற்சிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனவே ஜோ பைடன் நிர்வாகம் நட்பு நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி ராணுவத்தை நவீனப்படுத்தவும், பயங்கரவாத குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |