சீனா கொரோனா அச்சத்தினால், மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தடை அறிவித்துள்ளது.
சீன அரசு, கடந்த வாரத்தில் தங்களது எல்லையில் இருக்கும் எவரெஸ்ட் மலையேற்ற கிழக்குச் சரிவு பாதைக்கு செல்வதற்கு சுமார் 38 மலையேற்ற வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி அனைத்து மலையேற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
அதில் தொற்று இல்லாதவர்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும். மேலும் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிக்கடி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் வீரர்களுக்கு நேபாளத்திலிருந்து தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று சீனா, எவரெஸ்ட் மலையேற்றத்திற்கான அனுமதியை தடை செய்திருக்கிறது.