கடந்த மாதம் 6ஆம் தேதியே இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்ததாக சீனா அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளது
இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடுருவியதே காரணம் எனக் இந்திய வீரர்கள் கூற, இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்ததால் தான் மோதலும் உயிர் இழப்பும் நடந்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
அதோடு கடந்த மாதம் 6ம் தேதி எல்லை தாண்டி இந்திய வீரர்கள் வந்ததாகவும் அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து தன்னிச்சையாக இந்தியா சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு பலமுறை சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையும் தாண்டி ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்கின்றது.
மே மாதம் 6ஆம் தேதி தடுப்பு வேலி அமைப்பதற்காக இந்திய வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டி வந்துள்ளனர். அவர்களின் செயல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன வீரர்களுக்கு இடையூறாக அமைந்தது. இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று கல்வான் கரையை தாண்ட மாட்டோம் என உறுதி அளித்தது இந்தியா. இதனை தொடர்ந்து இரண்டு தரப்புகளும் படைகளை விலக்குவது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் கடந்த 15ஆம் தேதி அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய முன்கள வீரர்கள் எல்லை தாண்டி வந்து தனித்திருந்த பதற்றத்தை சீர்குலைத்து விட்டனர்” என பதிவிட்டிருந்தார்.