சீனாவில் நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்
ஷாண்டோங் நகரத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சாங். இவர் இரண்டு மாதங்கள் வுஹான் மாநகரில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் ஈடுபட்டிருந்தார். மார்ச் 21 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிய சாங் கொரோனா நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 4ஆம் தேதியுடன் தனிமையை முடித்த சாங் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நாட்களில் மூன்று முறை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்றே முடிவுகள் வந்துள்ளன.