சீனாவின் அடுத்த தாக்குதல் சைபர் மூலமாக இருப்பதால் சீன செயலிகள் தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது
சீனா அடுத்தகட்டமாக இந்திய அரசுடன் இணைந்திருக்கும் இணையதளங்கள், ஏடிஎம்களுடன் தொடர்புடைய வங்கி அமைப்பு போன்றவற்றை செவ்வாய் மற்றும் புதன் கிழமை அன்று சீனா சைபர் கிரைம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உளவுதுறை எச்சரித்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிகமானவை தோல்வியில் முடிந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்குடுவில் சீன ராணுவ மக்கள் விடுதலைப் படையில் இருக்கும் ஒரு பிரிவின் தலைமையகம் அமைந்துள்ளது. அங்கு தான் சீன அரசின் ஆதரவுடன் ஹேக்கிங் போன்ற செயல்களை செய்யும் ஹேக்கர்களும் அதிகமாக உள்ளனர். எனவே சீன ராணுவத்தினரின் பங்களிப்பு இதில் இருக்கும் என்றே உறுதியாக நம்ப படுகின்றது என உளவுத்துறை தெரிவித்துள்ளது. தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதால், தடை செய்ய வேண்டிய 50 சீன மொபைல் பயன்பாடுகளை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
அந்த அமைப்பின் அறிக்கை படி இந்த சீன பயன்பாடுகள் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பு தகவல்கள் வெளியில் அனுப்பப்படுகின்றது. டிக் டோக், ஹலோ, யூசி பிரௌசர் போன்ற செயலிகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே கருதப்படுகின்றது. ஆனால் பயனர்களின் தகவல்களை நாட்டிற்கு வெளியில் அனுப்பும் குற்றச்சாட்டுகளை இந்நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளது.