Categories
உலக செய்திகள்

சீனா ஏன் இப்படி பண்றீங்க….? கொரோனாவின் முக்கிய தகவலை கொடுங்க…. WHO குற்றச்சாட்டு…!!

கொரோனாவின் தோற்றம் பற்றிய தகவல்களை உலக சுகாதார அமைப்பிடம்  ஒப்படைக்க சீனா மறுத்து விட்டது என அக்குழுவில் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு சீன அரசாங்கத்திடம், 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம்  வூஹான் நகரில் முதலில்  கண்டறிந்த 174 கொரோனா பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டது.

ஆனால், சீனா முக்கிய தகவல்களை கொடுக்க மறுத்து விட்டதாகவும் முதல் பாதிப்பு பற்றிய சுருக்கமான செய்தியை மட்டுமே கொடுத்துள்ளதாகவும்  WHO  குழுவின் உறுப்பினராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் தொற்று நோய் நிபுணர் டோமினிக் டுவையர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுக்குறித்து  அவர் கூறுகையில் “நாங்கள் சீனாவிடம் கேட்கும் முக்கிய தகவலை கொண்டு முதலில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களிடம்  என்ன கேள்வி கேட்கப்பட்டது என்றும் அதற்கு அவர்கள் என்ன பதில் அளித்தனர் என்றும் தெரிந்துகொள்ள முடியும்” என்று கூறினார்.

 

Categories

Tech |