Categories
உலக செய்திகள்

கொரோனாவின் பிறப்பிடமான… “வூஹானில் நோயாளிகள் யாருமே இல்லை”… கெத்தாக நிற்கும் சீனா!

வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த  அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரசால் ஒட்டு மொத்த உலகமுமே சின்னாபின்னமாகியுள்ளது. 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த கொரோனா வைரஸில் இருந்து சீனா மீண்டு தனது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது.. இந்நிலையில், கடந்த 7 நாட்களாக கொரோனாவால் சீனாவில் எவ்விதமான உயிரிழப்புகளும் பதிவாகவில்லை.

அதேநேரம்  கொரோனா வைரஸ் தொற்றால் தாக்கப்பட்டு வூஹான் நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. தற்போது வூஹான் நகரில் கொரோனா நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தவர்கள் யாருமே இல்லை என சீன சுகாதார துறை அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதார துறையின் அதிகார்வப்பூர்வ ஊடக பேச்சாளர் கூறியதாவது, “ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி (இன்று) வெளியிடப்படும் அறிவிப்பில், வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எவரும் இல்லை. வூஹான் நகரம் மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் கொரோனாவுக்கு எதிராக இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் இதுவரையில் கொரோனா வைரசால் 4,632 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  82,827 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |