கடந்த 9ஆம் தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியா – சீனா எல்லை பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
இந்திய எல்லைப் பகுதியில் நுழைந்து அந்த எல்லையை மாற்றுவதற்கு சீன ராணுவத்தினர் முயன்றதாகவும், ஆனால் இந்திய வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, சரியான நடவடிக்கை மேற்கொண்டதால், சீன ராணுவ வீரர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, மீண்டும் அவர்களது எல்லைக்குள் அவர்கள் சென்று விட்டார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தின் உடைய செயல் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் மக்களவையில் தெரிவித்து இருக்கிறார்.