அமெரிக்கா ஜனநாயகத்தை பேரழிவின் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக சீனா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் குறித்த இணையவழி மாநாட்டை இரண்டு நாள்கள் நடத்தியுள்ளார். அந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். இருப்பினும் அந்த மாநாட்டில் ஹங்கேரி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் “ஜனநாயகம்” என்பது மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதற்காக அமெரிக்கா சாதுரியமாக பயன்படுத்தும் “பேரழிவுக்கான ஆயுதம்” என்று இந்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா ஏனைய நாடுகளை பனிப்போர் காலகட்டத்தில் இருந்தது போல் கொள்கை அடிப்படையில் பிரித்து ஆளுவதற்காக முயற்சி செய்வது வருவதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.