Categories
உலக செய்திகள் பல்சுவை

27 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சியில் சீனா…!!

சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி Q2 காலாண்டு முடிவில் 6.2 விழுக்காடாக இருந்ததில் இருந்து Q3 காலாண்டில் 6 விழுக்காடாக சரிந்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா கடந்த 27 ஆண்டுகள் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே நீண்ட நாட்களாக நடந்த வர்த்தகப் போர் காரணமாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிந்துள்ளது.

Image result for China  economic downturn 27 years.

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அரசு வரி உயர்வு செய்ததால் ஒப்பந்தம் செய்த அளவை விட மிகக் குறைவான அளவையே சீனா கொள்முதல் செய்தது. இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் நிலவினால், சீனா மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.

Image result for China  economic downturn 27 years.

இந்த கணிப்பு உண்மையாகும் வகையில் தற்போது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) சரிவை சந்தித்துள்ளது. 1992ஆம் ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சீனா சந்தித்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரை அதாவது Q2 காலாண்டில் 6.2 விழுக்காடாக இருந்த சீன பொருளாதாரம் Q3 காலாண்டில் 6 விழுக்காடாக சரிந்துள்ளது என நேஷனல் பீரோ ஆப் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தகவல் நேற்று வெளியான நிலையில், மீண்டும் சீன பொருளாதாரம் சரிவை சந்திக்கும் சூழலில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |