சீனாவின் தடுப்பூசி பணிகளை பார்த்தால் நமக்கெல்லாம் கொஞ்சம் வெட்கமாக தான் இருக்கிறது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனா இவ்வளவு சீக்கிரத்தில் தடுப்பூசி விஷயத்தில் வெற்றி பெற்றதை பார்க்கும்போது, நமக்கு வெட்கமாக இருக்கிறது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சீன தடுப்பூசி குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அந்த தடுப்பூசி செயல்திறன் அற்றவையாக இருக்கும் பட்சத்தில் புதிதாக மாற்றமடைந்த கொரோனா வைரஸ் உருவாகலாம். மேலும்,சீனா இவ்வளவு சீக்கிரமாக தடுப்பூசியை தயாரித்து மற்ற நாடுகளுக்கு வழங்குவதை பார்க்கும் போது நமக்கெல்லாம் கொஞ்சம் வெட்கமாக தான் இருக்கிறது என்று கூறினார்.
பிரான்சில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சனோஃபி இன்னும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கவில்லை. இதனைப் பார்க்கும்போது இம்மானுவேல் சொல்வதில் நியாயம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.