இந்திய நாட்டுடனான எல்லை ஒப்பந்தங்களை புறக்கணிக்கும் சீனாவால், இரண்டு தரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஆறு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, முதலில் பிரேசில் நாட்டிற்கு சென்ற அவர் தெரிவித்ததாவது, கடந்த 1990 ஆம் வருடத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், சீனா அவற்றை புறக்கணித்தது. சில வருடங்களுக்கு முன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது பற்றி எல்லோருக்கும் தெரியும். தற்போது வரை அந்த விவகாரம் தீர்க்கப்படவில்லை. இதனால் இரண்டு தரப்பு உறவுகளும் பாதிக்கப்படுகிறது.
பக்கத்து நாட்டுடன் நல்ல உறவைப் பேண வேண்டும் எனில் பரஸ்பர மரியாதை தேவை என்று நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஒவ்வொருவரும் பிறரின் வருத்தம் பற்றி உணர வேண்டும். இந்த உறவு ஒரு வழி பாதையாக இருந்து விட முடியாது. தற்போது இந்தியா மற்றும் சீன நாடுகளின் உறவு கடின கட்டத்தில் உள்ளது என்று கூறியிருக்கிறார்.