சீனாவுக்கு கொடுத்த பணியை முடிக்காத காரணத்தினால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது
இந்திய ரயில்வே 2016 ஆம் வருடம் ஜூன் மாதம் சீனாவின் தலைநகரான பெய்ஜிகில் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்திற்கு 417 கிலோமீட்டர் தொலைவில் கான்பூர்-தீன்தயால் உபாத்யாய் ரயில்வே வழித்தடத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 471 கோடி ஆகும். இதுகுறித்து இந்திய ரயில்வே “ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு சீன நிறுவனம் அவர்களது பணியை முடித்திருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை 20 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. இதனால் சீன நிறுவனத்தின் மீது இருந்த நம்பிக்கை இழந்துவிட்டோம். அவர்களின் வேலையில் திருப்தி இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு அளித்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளது. இதனிடையே சீனா இந்தியா எல்லையில் நடந்த பிரச்சனையின் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.