Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு அஞ்சி நடுங்கிய சீனா… உலக நாடுகளிடம் அம்பலப்பட்டது …!!

கொரோனா வைரஸ் உயிரிழப்பால் அமெரிக்கா பெரும் துயரை சந்தித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

 

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2,250,660 பேர் பாதித்துள்ளனர். 154,256 பேர் உயிரிழந்த நிலையில், 572,076 பேர் குணமடைந்துள்ளனர். 1,524,328 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 56,958 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது.

 

தினமும் கொத்துக்கொத்தாக மரணம் ஏற்பட்டு வருவதால் சொல்ல முடியாத துயரை அமெரிக்கா சந்தித்து வருகின்றது. உலக நாடுகளுக்கு சீனா அனுப்பிய கொரோனா மருந்து, சிகிச்சை பொருட்களையெல்லாம் தங்கள் நாட்டிற்கு மிரட்டி திருப்பி விட்ட அமெரிக்காவில் மரணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபர் ட்ரம்ப் கொரோனாவில் இறுதி கட்டத்தை கடந்து விட்டோம், இனி கவலை இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அமெரிக்காவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று ஒரே நாளில் புதிதாக 32,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 2,535 பேர் கொரோனாவால் இறந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 37,154 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60,510 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 4 நாளில் மட்டும் ( 14ம் தேதி – 6,185 , 15ம் தேதி – 2618, 16ம் தேதி – 2,176 பேர், 17ம் தேதி – 2,535 ) 13,514 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.

இதனிடையே அமெரிக்காவின் பொருளாதாரத்தை சாய்க்க சீனாதான் இந்த வைரஸை அனுப்பியுள்ளது என்று அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டி இருந்தார். இதனை சீனா வைரஸ் என்று குறிப்பிட்டு பேசிய டிரம்ப்க்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்தது. மேலும் சீனா பல்வேறு தகவல்களை மறைக்கின்றது என்று விமர்சித்த அமெரிக்கா அதற்க்கு துணையாக உலக சுகாதார அமைப்பு இருந்து வருகின்றது என்றும் விமர்சித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் குற்றசாட்டை தொடர்ந்து மறுத்து வந்த சீனா பல்வேறு தகவல்களை மறைப்பை உணர்ந்த அமெரிக்காவின்  சிஐஏ  இந்த வைரஸ் பரவியது குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதோடு முதலில் கொரோனவை கட்டுப்படுத்துவோம் பின்னர் சீனாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்போம் என அமெரிக்க உளவுத்துறை  அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் பயந்து போன சீனா மறுநாளே கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் வரை  உயிரிழப்பு சீனாவில் 3,342ஆக இருந்த நிலையில் நேற்று அது 4,632ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா வெளியிட்ட புள்ளி விவரம் சொல்கிறது. இது சீனாவின் போலி முகத் திரையை கிழித்தெறிந்துள்ளது. இதற்க்கு அந்நாட்டு அரசு மரண எண்ணிக்கையை அரசுக்கு சரியாக சொல்லவில்லை” என மருத்துவர்கள் மீது பழிபோடுகின்றது. வீட்டில் இறந்தவர்கள் கணக்கு எங்களுக்கு வரவில்லை. மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்கிறதில் ரொம்ப கவனமாக இருந்த காரணத்தினால் அரசுக்கு எத்தனை பேர் மரணமடைந்தார் என சொல்ல தவறிவிட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளது. மொத்தத்தில் சீனா கொரோனா விஷயத்தில் மறைத்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது

Categories

Tech |