Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு நீங்க தான் காரணம்….! சீனாவுக்கு எதிராக திரும்பிய WHO …!!

கொரோனா தொற்று பரவுவதற்கு வூஹானிலிருக்கும் சந்தை முக்கிய காரணமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

சீனாவின் தொடங்கி உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் வூஹான் நகரில் இருக்கும் கடல்வாழ் உயிரின சந்தையில் இருக்கும் வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதன்பின்னர் சந்தையிலிருந்து தொற்று பரவவில்லை நகரில் இருக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டது தான் கொரோனா என்ற தகவல்களும் பரவி அமெரிக்கா சீனாவை தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தது.

சீனா வைரஸ் பரவலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இறப்பு புள்ளி விவரத்தை தவறாக கூறியதாகவும் உலக நாடுகள் சீனா மீது பல்வேறு தரப்பில் குற்றம் சுமத்தி வந்தனர். அதோடு அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தி வந்தார். சீனா கொரோனா விவகாரத்தில் சிறப்பாக செயல்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா பரவலில் வூஹான் சந்தைக்கு பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்பு வைரஸ் நிபுணர் டாக்டர் பீட்டர் கூறியதாவது, “உலக நாடுகள் தற்போதைய சூழலில் இருப்பதற்கு வூஹானில் இருக்கும் சந்தையும் ஒரு காரணம் என்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது. ஆனால் அது எந்த அளவுக்கு காரணமாக அமைந்தது என தெரியாது. இந்த வைரஸ் சந்தையிலிருந்து வந்ததா இல்லை தானாக உருவானதா என்பதை தெளிவாக கூற முடியவில்லை. ஆனால் சந்தையிலும் சந்தையை சுற்றியும் இந்த வைரஸ்கள் அதிகளவில் காணப்பட்டன. அதுமட்டுமில்லாமல் வைரஸ் பரவுவதை தடுக்க சீன ஜனவரி மாதம்தான் சந்தையை மூடியுள்ளது” என தெரிவித்தார்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |