Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்ட சீனா…. வச்சு செய்ய போகும் இந்தியா – அமெரிக்கா …!!

டெல்லியில் அமெரிக்கா – இந்தியா அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்து கொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே நடத்துகிறார்கள். அதிலிருந்து அதன் முக்கியத்துவம் புரியும்.

இந்தியா – லடாக் எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளுக்குமே பொதுவான அச்சுறுத்தலாக இருக்கின்றது.சீனா இந்த பிராந்தியத்தில் தான் தான் மிகவும் வலுவான நாடு என்று இருந்த சூழ்நிலையில் இருந்து இப்போது உலகம் முழுவதுமே தன்னுடைய ஆதிக்கம் வர வேண்டும் என விரும்புகிறது.

இந்தியாவுக்கு அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாளம் போன்ற நாடுகள் தவிர அவை தாண்டி சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என்று சீன கடல் முழுவதும் மற்றும் ஆப்பிரிக்கா கண்டம் ஆகிய இடங்களிலும் ஆதிக்கத்தைப் பரப்ப முயற்சி செய்கிறது.ஆகவே தான் அமெரிக்கா சீனாவின் இந்த முயற்சிகளை தொடர்ந்து இப்படியே விடக்கூடாது. அதை முறியடிக்க வேண்டும். அதை தவிர இந்தியாவுக்கு உதவி செய்வதன் மூலம் இந்திய பிராந்தியத்திலே அமெரிக்காவுக்கு ஒரு வலுவான கூட்டணி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தால் தேர்தல் என்று இருந்தாலும் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.

பொதுவாக எந்த நாடும் தேர்தலுக்கு முன்பு எந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடாது. ஆனால் இந்திய உறவு மிக முக்கியம் என்பதாலும், சீனாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் அதிபர் தேர்தலுக்கு முன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. மேலும் இந்தியாவுடன் எப்போதும் நெருங்கிய நட்போடு இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணமாக உள்ளது.இதற்க்கு முன்பு இரு நாடுகளுக்குமிடையே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றன.

பாதுகாப்புத்துறை, தகவல் பரிமாற்றம், பாதுகாப்பு படை பயிற்சி ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இருநாட்டு ராணுவ வீரர்களும் உடனடி தகவல் பரிமாற்றங்களை செய்து  வசதி ஏற்படுத்தப்பட   உள்ளது.சீனா ஆச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு கூடுதல் பலம் தேவை. அதற்கான தொழில் நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல இந்தியாவுக்கு புதிய தொழில்நுட்பங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்.

அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக பி -8 போஸிடான் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்.பி -8 போஸிடான் விமானம் மலை உச்சியில் இருந்து வீரர்களை மீட்கவும், வீரர்களை அங்கு கொண்டு செல்லவும் உதவுகிறது. ஏற்கனவே ஏராளமான சி – 17 குளோப் மாஸ்டர்கள் விமானங்களை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கியுள்ளது. சி – 17 குளோப் மாஸ்டர்கள் – மிக அதிக எடையிலான பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவும்.

Categories

Tech |