Categories
உலக செய்திகள்

“கதி கலங்கி நிற்கும் உலக நாடுகள் ” … வெற்றி மகிழ்ச்சியில் சீனா..!

சீனாவின் வுஹான் நகரில் தோன்றி  150 -க்கும்  மேற்பட்ட உலகநாடுகளில்  பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது.

சீனாவை தொடர்ந்து  கொரானாவின் தாக்கம் மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 8000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 190000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட நாடுகள் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

 

ஆனால், பெரும் பாதிப்பிற்கு உள்ளான சீனா தற்போது  கொரானாவை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. உலக நாடுகள் கலங்கி நிற்கும்  வேளையில் சீனா மகிழ்ச்சியாக  கொண்டாடி வருகிறது.  இதற்காக வுகான் நகரத்தில்  அமைந்துள்ள கட்டடங்கள் மற்றும் பாலங்களில் உள்ள டிஜிட்டல்  விளம்பர பதாதைகளில்  சீன மொழியில் “வுஹானுக்கு வெற்றி”  மற்றும் “சீனாவிற்கு வெற்றி” என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

சீனாவிற்கு  அடுத்தபடியாக  கொரோனா வைரசால்  இத்தாலியில் 3000-த்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளார்கள். ஈரானில் இதுவரை  988 பேர் பலியான நிலையில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த வைரஸ்  மேலும் பல நாடுகளை  பெரிதும் பாதித்துவருகின்றது.

Categories

Tech |