தைவான் நாட்டிற்குள் சீனாவின் ஜெட் விமானங்கள் புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தைவான் பிராந்தியத்தில் சீனாவை சேர்ந்த 36 ஜெட் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் 17 ஜெட் விமானங்கள் ஜலசந்தி இடைநிலை கோட்டை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர், தைவான் நாட்டிற்கு சென்று வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டைச் சுற்றி சீனா ராணுவ பயிற்சி மேற்கொண்டு வந்தது.
கடந்த ஞாயிற்று கிழமை ராணுவ பயிற்சி முடிவடைந்தது. இந்நிலையில் இன்று சீனா 36 ஜெட் விமானங்களை தைவானிற்கு அனுப்பியுள்ளது. எனினும், தைவான் நாட்டின் ஆயுதப்படையினர், சீனா மேற்கொள்ளும் செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறார்கள். அதன்படி அத்துமீறும் சீன விமானங்களுக்கு தைவான் நாட்டின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைகளின் மூலமாக பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.