சீன அரசு ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள உலோக வளங்களை வெட்டி எடுப்பதில் ஆர்வம் காட்டுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சீன அரசு தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் உலோக வளம் ஆப்கானிஸ்தானில் நிரம்பி இருப்பது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் விலை உயர்ந்த மற்றும் அரிதான உலோகங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்த உலோகங்கள் மின்சார கார்களுக்கான ரீசார்ஜ் பேட்டரிகள், உயர்தொழில்நுட்ப ஏவுகணை வழிகாட்டு சாதனங்கள், ஐபோன், சூப்பர் கண்டக்டர்ஸ், நீராவி இயந்திரம், லேசர், மானிட்டர்கள், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், கம்ப்யூட்டர், கண்ணாடி இலைகள் ஆகியவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
மேலும் அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் முன்னாள் தூதர் அகமதுஷா கடாவாசை ஒரு லட்சம் கோடி டாலர் முதல் 3 லட்சம் கோடி டாலர் வரை இந்த உலோகங்களின் மதிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பின்படி ரூ. 75 லட்சம் கோடி முதல் ரூ.225 கோடி டாலர் வரை மதிப்பு கொண்டவை இந்த உலோகங்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சீன அரசு இந்த உலோகங்களை வெட்டி எடுக்கும் திட்டத்தினை தலிபான் ஆட்சியுடன் நெருக்கமாக இருந்து சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.