சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹூபேய் மாகாணம் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அன்ஹுய், ஜிஅங்ஜூ, ஹுஜுயங் போன்ற மாகாணங்களிலும் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது . இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆயிரத்துக்கும் மேலான வீடுகள் வெள்ளதில் சூழ்ந்துகிடக்கிறது.
போக்குவரத்து மற்றும் மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த வெள்ள பாதிப்பால் பத்து லட்சத்துக்கும் மேலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றனர். இந்நிலையில், சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களால் பாதிக்கப்பட்டு இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலர் நிலச்சரிவுகளில் சிக்கி காணாமல் போனதாகவும் அவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.