Categories
உலக செய்திகள்

சீன மாணவர்களை குறிவைக்கும் கும்பல்…. ஒரு காணொளியில் பெற்றோரைப் பதற வைத்து பணம் பறிப்பு….!!

ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருக்கும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பெரும்பாலான சீன மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.சீன மாணவர்கள் அனைவரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்கார சீன மாணவர்களை அடையாளம் கண்டு ஆஸ்திரேலியா கும்பல் ஒன்று அவர்களை குறிவைத்து கடத்துவதை வழக்கமாக கொண்டு வருகிறது.சீனாவில் உள்ள போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இத்தகைய கும்பல் அலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். பின்னர், நீங்கள் சீனாவில் குற்றம் செய்து விட்டு இங்கே தப்பி வந்துள்ளீர்கள்.உங்களை மீண்டும் நாடு கடத்தப் போகிறோம் என பேசி அந்த மாணவர்களை மிரட்டுவார்கள். பின்னர் பயந்து வரும் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி அந்த கும்பல் அவர்களை காரில் கடத்திச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து விடும்.

கடத்தி வந்த மாணவர்களை அரை நிர்வாணமாக்கி கயிற்றில் கட்டிப்போட்டு, மாணவனின் அலைப்பேசியில் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து விடுவர்.அதன் பிறகு அந்த வீடியோவை சீனாவில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடத்தப்பட்ட மாணவரின் செல்போனில் இருந்து அனுப்பி வைப்பார்கள்.பின்னர் இரண்டு நாட்களுக்கு கடத்தப்பட்டவரின் அலைபேசியை இந்த கும்பல் அனைத்து வைத்துவிடும். அதனால் தங்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ  என்று பெற்றோர்கள் பயந்து விடுவர்.இரு நாட்களுக்கு பின்னர் கடத்தல் கும்பல் மீண்டும் மாணவர்களின் அலைபேசியில் இருந்து பெற்றோரை தொடர்பு கொண்டு இவ்வளவு பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று மிரட்டல் விடுவார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு மாணவர்களின் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொள்வர். இவ்வாறு சீன மாணவர்கள் 8 பேரை கடத்திய மர்ம கும்பல், இந்த வருடத்தில் மட்டும் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றிருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே சிட்னியில் படித்துக்கொண்டிருக்கும் சீன மாணவர்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்த நகரத்தின் காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர். அலைபேசியில் உங்களுக்கு ஏதாவது மிரட்டல் வந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என சீன மாணவர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |