இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவை அதிக இராணுவ இழப்புகளை சந்திக்க வைக்க சீனாவால் உருவாக்க முடியும் என்று அந்நாட்டு ஊடகம் எச்சரித்துள்ளது
மேற்கு இமயமலையில் பிரச்சினைக்குரிய எல்லைப்பகுதியில் ஒரு மலையை சீனப் படைகள் ஆக்கிரமிப்பதற்கு முயற்சி மேற்கொண்டபோது இந்திய படை வீரர்கள் அதனை முறியடித்ததாக நேற்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதே நாளில் சட்டவிரோதமாக இந்தியப் படைகள் பகிரப்பட்ட எல்லையை தாண்டி வந்து விட்டனர். உடனடியாக படைகளை இந்திய ராணுவம் திரும்பப் பெற வேண்டும் என சீனாவின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை சீன படைகள் கடக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவுடன் இந்தியா போட்டியிட விருப்பம் கொண்டால், அவர்களை விட சீனாவிடம் திறன்கள் மிக்க கருவிகள் அதிக அளவு உள்ளது. இந்திய ராணுவம் சீன ராணுவத்துடன் மோதுவதற்கு விருப்பம் கொண்டால் 1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட இழப்புகளை விட அதிக அளவு இந்திய ராணுவம் சந்திக்க சீனா வழிவகுக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் எச்சரித்துள்ளது.