சீனாவின் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 வருடம் சிறை தண்டனையும் ரூ.4,89,922 அபராதமும் விதிக்கப்படும் என சீனா அரசு எச்சரித்துள்ளது
ஹாங்காங் சட்டப்பேரவையில் கடந்த 4ஆம் தேதி சீன தேசிய கீதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் 41 பேர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜூன் 16ஆம் தேதி முதல் நிறைவேற்றப்பட்ட மசோதா அமலுக்கு வந்தது.
சீனாவின் தேசிய கீதத்தை யாரேனும் அவமதித்தால் அவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் 6,450 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,89,922)அபராதமும் விதிக்கப்படலாம் என்றும், சீனாவின் தேசிய கீதத்தை பள்ளி மாணவர்களுக்கு இசைக்க கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்க இந்த புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய கீதத்தின் வரலாறு அதன் சிறப்பும் எடுத்துரைக்க வேண்டும் அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் நிகழ்ச்சிகளில் நிறுவனங்களோடு அனைவரும் சேர்ந்து தேசிய கீதத்திற்கு மதிப்பளித்து பாட வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது