Categories
தேசிய செய்திகள்

இதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்…. “சீன மூக்கை நுழைக்க வேண்டாம்” – இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் பிரச்சினையை ஏற்படுத்தி வரும் சீனா உள்நாட்டு விவரங்களில் தலையிட கூடாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக கூறியுள்ளது.

ஜம்மு – காஷ்மீரி மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஒரு வருட காலம் ஆகும் நிலையில், பாஜக கட்சியினர் இதனை கொண்டாடி வருகின்ற நிலையில் பீஜிங் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், ” ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு தன்னிச்சையானது என்றும் செல்லுபடியாகதது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும்  காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார். இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள் என்பதால் இந்த பிரச்சனையில் இருந்து விலகி செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த பிரச்சனையை அமைதியான முறையில் ஆலோசனைகளின் மூலம் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இத்தகைய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்க சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று கடுமையாக கூறி இருக்கிறது. ஏற்கனவே லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கை உரிமை கொண்டாடி வரும் சீனா, அங்கு படைகளை குவித்ததால் இரு நாட்டுக்கும் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், தற்போது காஷ்மீர் விவகாரத்திலும் சீனா தலையிடுவது இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை அதிகப்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |