Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா…. பாகிஸ்தான் யாரா இருந்தா என்ன ? ஒன்னும் பண்ண முடியாது – கெத்து காட்டும் இந்தியா ….!!

இந்தியா – அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது சீனா, பாகிஸ்தானை நடுங்க வைத்துள்ளது.

இன்று காலை அமெரிக்கா – இந்தியா இடையே நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  அதீத தொழில் நுட்பம் மூலமாகவும் இந்தியா எல்லைப் பகுதிகளிலேயே உள்ள பாதுகாப்பு எப்படி இருக்கிறது ?  எதிரிகள் எந்த இடத்தில் இருக்கிறார்கள்? எந்த இடத்திற்கு நகர்கிறார்கள் ? போன்ற விஷயங்களை துல்லியமாக கவனித்து தெரிந்து கொள்ள முடியும்.

கிழக்கிலோ அல்லது மேற்கிலோ இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் ராணுவ நடவடிக்கைகள் இருந்தால் அதை கண்டறிந்து ஏவுகணைகள் மூலம் அல்லது விமானங்கள் மூலம் துல்லியமாக தாக்க முடியும். பல நாட்களாக தொடர்ந்து தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை, ஆலோசனை நடந்த நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் பலன்:

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

அரபிக்கடல் மூலமாகவோ, இந்திய பெருங்கடல் மூலமாகவோ, கப்பல்களைக் கொண்டு தாக்குதல் முயற்சி செய்தால் அறிய முடியும்.

தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தாலோ அல்லது காஷ்மீரின் லடாக் எல்லை, பஞ்சாப் போன்ற எல்லைகளிலிருந்து ஊடுருவ முயற்சி செய்தாலோ எளிதில் கண்டறியலாம்.

விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சி செய்தாலோ உடனே தெரிந்துகொள்ளலாம்.

இந்த விவரங்கள் அனைத்தும் அமெரிக்காவிடம் உள்ள சேட்டிலைட் தகவல்கள் மூலமாக இந்தியாவிற்கு பரிமாறப்படும். அதே போல இந்தியாவும் தன்னிடம் உள்ள தகவல் எல்லாம் அமெரிக்காவிடம் பரிமாறிக்கொள்ளும். இந்த தகவல்களை வைத்து ஏவுகணைகள் மூலமாக எதிரிகளை சுலபமாக அதுவும், மிகவும் துல்லியமாக தாக்க முடியும். ஆகவே தான் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை இது பாதுகாப்பு துறை ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

Categories

Tech |