சீனாவுடன் தொடர்புடைய 2500க்கும் மேலான யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோக்களை பகிரும் தளமாக யூடியூப் கருதப்படுகிறது. அதில் சீனாவுடன் தொடர்புடைய பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபற்றி வெளியான அறிக்கையில், கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடைய விசாரணையில், யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட 2500 சேனல்கள் பற்றிய எத்தகைய தகவல்களையும் கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை.
இதனைத்தொடர்ந்து சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனமாக உள்ள கிராபிகாவால் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் தவறான பிரச்சாரங்களை பரப்பிய சேனல்களை மட்டும் தான் கூகுள் நீக்கி இருப்பதாக கூறியுள்ளது. இந்த விவகாரம் பற்றி அமெரிக்காவில் இருக்கின்ற சீன தூதரகம் எத்தகைய கருத்துக்களையும் கூறவில்லை. அதே சமயத்தில் சீனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்பதற்கும் மறுத்துவிட்டது.
மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் பலர் அமெரிக்கா அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மக்கள் மனதை மாற்றும்படி பல்வேறு தவறான தகவல்களை வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாகவே கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் பிரச்சாரத்தை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து அளித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.