சீன நாட்டின் அதிபர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதனை பொய்யாக்கும் வகையில் பொது இடத்தில் தோன்றியிருக்கிறார்.
சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் சமீப நாட்களாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் அதிபர் இன்று கலந்து கொண்டார். அதன் மூலம், இம்மாதம் 16-ஆம் தேதிக்குப்பின் முதல் தடவையாக அதிபர் பொது இடத்தில் தோன்றியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.